கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடித்தெரு பாஞ்சாலிபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு பால்குட பவனி எடுத்துவரப்பட்டு கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
நீண்ட வரலாற்றினையுடைய புளியந்தீவு கல்லடித்தெரு பாஞ்சாலிபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால்குட பவனி நடைபெற்றது.
இந்த பால்குட பவனியில் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எந்தி பவனியாக ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் திருச்சடங்கின் கதவு திறத்தல் சடங்கு நடைபெற்றது.
கதவி திறக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து அடியார்கள் ஏந்திவந்த பால்குடம் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் திருச்சடங்கில் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வும் 17ஆம் திகதி புதன்கிழமை பகல் வனவாசம் நிகழ்வும் அன்று இரவு கும்பச்சடங்கும்,வியாழக்கிழமை இரவு அர்ச்சுனர் தவம் சொல்லும் நிகழ்வும் நடைபெற்று மறுநாள் வியாழக்கிழமை மாலை நடைபெறும் தீமிதிப்பு உற்சவத்துடன் திருச்சடங்கு நிறைவுபெறும்.