செயற்கை தொழில்நுட்பத்தினால் (Artificial Intelligence – AI) பெண் போல உருவாக்கப்பட்ட AI மாடல்களுக்கு இடையில் உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில், மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் AI பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மிரியம் பெஸ்ஸா என்ற தொழில்நுட்ப வல்லுநரால் இந்த AI மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
அழகு ததும்பும் இந்த AI மாடல், ஹிஜாப் அணிந்த ஒரு லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளூயன்ஸராக சமூக ஊடகங்களில் இயங்கிவருகிறது.
இந்த உலக அளவிலான மிஸ் AI போட்டியில் கலந்துகொண்ட மாடல்கள் அழகு, தொழில்நுட்பத்திறன் மற்றும் சமூக ஊடகங்களில் செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டன. அவற்றிலிருந்து டாப்-10 AI மாடல்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
பிரான்ஸ் மற்றும் போர்த்துகல் நாடுகளைச் சேர்ந்த AI மாடல்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.