இலங்கை அதிபர் தேர்தலானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் அல்லது 12ஆம் திகதிகளில் நடைபெற சாத்தியம் உள்ளதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அதிபர் தேர்தல் தொடர்பிலான சபை ஒத்தி வைப்பு விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “அதிபர் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எவ்வித காரணங்களும் கிடையாது மக்களின் ஆணை தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை அதிபர் பதவி காலத்தை நீடிக்க முடியாது. 1982ம் ஆண்டை தவிர நாட்டை ஆட்சி செய்தல் தொடர்பிலான தேர்தல்கள் உரிய காலங்களில் நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபரின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் அதனை குறைக்கவோ அதிகரிக்கவோ முடியாது” என தெரிவித்துள்ளார்.