Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய நேபாளத்தில் பயணிகளுடன் அடித்து செல்லப்பட்ட இரு பேருந்துக்கள்!

மத்திய நேபாளத்தில் பயணிகளுடன் அடித்து செல்லப்பட்ட இரு பேருந்துக்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

மத்திய நேபாளத்தில் அமைந்துள்ள மதன் – ஆஷ்ரித் பிரதான சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது, இன்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றதால், மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்போது சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் திரிசூலி ஆற்றில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு இடையூறாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேபாள காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மீட்பு பணிகளுக்காக சம்பவ இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் பவேஷ் ரிமல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் தெரிவிக்கையில், “நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் நாட்டின் பல பகுதிகளில் பலர் வீடு மற்றும் சொத்துக்களை இழந்துள்ளனர்.

மேலும், உள்விவகார நிர்வாகம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளும் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளது.“ என தெரிவித்தார்.

இதேவேளை வானிலை மோசமாக இருப்பதால் காத்மண்டுவில் இருந்து சித்வானின் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
Next Post
வீதி கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி!

வீதி கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.