அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியில் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது, தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்க, ட்ரம்ப் விரைவாக பேசிக்கொண்டிருந்த மேடையிலேயே அமர்ந்து கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, மேடைக்கு வந்த அவரின் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்து, முகத்தில் ரத்தம் வழிய அங்கிருந்து அழைத்து சென்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்த போது மர்ம நபரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்க நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான ட்ரம்ப் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதுடன் அவர் நலமுடன் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.