மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று (14) காலை எரிபொருள் பெற்றுக்கொள்ள முச்சக்கரவண்டியில் வந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாவற்குடா பகுதியைசேர்ந்த 48வயதுடைய கந்தப்பொடி தங்கவடிவேல் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை தனது மகளை மேலதிக வகுப்பிற்காக கொண்டு சென்று விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்ப சென்ற வேளையிலே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரியான அம்ஹர் சின்னலெப்பை ஆகியோரும் உயிரிழந்தவரை பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.