நாட்டில் புதிய பல்கலைக்கழகமொன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம், அதனால் புதிய மூன்று தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இலங்கைக்கு கிடைக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) முன்னேற வேண்டும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று (13) நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அதிபர் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அதிபர், ”இந்த பாடசாலை குறித்து இங்கு பேசிய மாணவர்கள் தங்களுக்கு சிறந்த எதிர்காலமொன்று தேவை என்பதை கூறினர். கடந்த இருவருடங்களைத் திரும்பிப் பார்க்கும் போது அந்த கோரிக்கை நியாயமானதாகும்.
நாம் எதிர்காலத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியுமென சிந்திக்க வேண்டும். நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டிருப்பதால் எதிர்காலத்துக்கான முதல் அடியை வெற்றிகரமாக வைத்திருக்கிறோம்-என்றார்.