இந்த நாடு முன்னேறாமல் இருப்பதற்கு இனவாதம் ஒரு காரணம் அதேசமயம் முன்னேறுவதற்கு விவசாயிகள் ஒரு காரணம் எனவே எந்த பெரிய இனவாதி, மதவாதியாலும் இந்த அரிசி என்னுடைய இனம் சார்ந்த விவாயிகள் தான் உற்பத்தி செய்தனர் என பிரிக்க முடியுமா? அது தான் விவசாயிகளின் சக்தி எனவே இந்த மாவட்டத்தில் விவசாயிகளுக்காக ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றாக செயற்படுகின்றார்களே அன்றில் இருந்து இந்த மாவட்டம் இலங்கையில் முதல் மாவட்டமாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டதில் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் 350 விவசாயிகளுக்கு நேற்று சனிக்கிழமை (10) கிழக்கு மாகாண ஆளுநர் நீர்ப்பம்பிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னை ஆளுநராக நியமிக்கும் போது அனைத்துதுறைகளிலும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் விவசாயிகளின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றவேண்டும் ஏன் என்றால் இந்த நாட்டின் முழுவளர்ச்சி அவர்கள் கையில்தான் இருக்கின்றது என்றார்.
எவ்வளவு பெரியபணம் படைத்தவராக இருந்தாலும் அவர்களின் பசியை தீர்ப்பது விவசாயிதான் இந்த விவசாயிகளினால் உற்பத்தி செய்கின்ற உலர் உணவுதான் அவர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுப்பதற்கு உதவும் அந்தளவுக்கு சக்தி வாய்ந்த அனைத்து துறைகளினராலும் அதாவது விளையாட்டு துறையில் உள்ளவர்கள் சாதனை படைக்க வேண்டுமாயின் சக்தியுள்ள உணவு தேவை அதனை எல்லாராலும் கொடுக்க முடியாது அது விவசாயிகளால் மட்டும் தான் கொடுக்க முடியும் ஆனால் இந்த விவசாயிகளை போதுமானளவு அங்கீகரிகப்பட்டதை நாங்கள் அடையாம் கண்டு எமது அனைத்து வேலைத்திட்டங்களும் விவசாயிகள் சார்ந்த வேலைத்திட்டமாக இருக்கும்.
இருந்தபோதும் மாவட்த்தில் வாகரை பிரதேசத்தில் மட்டும் இந்த நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகின்றளவுக்கு கெக்கரிகாய் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துள்ளது எனவே ஏனைய பிரதேசத்தில் இந்த உற்பத்தியை செய்யாமைக்கான காரணம் என்ன எனற கேள்வி எழுந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கடந்த 2020 திட்டமிட்ட இந்த திட்டத்தில் 2 ஆயிரம் மோட்டர் வழங்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் திட்டமிட்ட இந்த திட்டத்தில் நிதி பற்றாக்குறையால் 350 முதற்கட்டமாக வழங்கப்படுகின்றது எனவே இப்படியாக விவசாயிகளை மேம்படுத்தி கொடுக்கும் போது அவர்களின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது .
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாரன் கட்சி பாராளுமன்றத்தில் அடையாளம் காணும் ஒரு முக்கியமான கட்சி அவரின் அதிக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது அவர்கள் நிறைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் எதிர்காலத்தில் கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாவட்டத்தில் வளர்ச்சியடையும் என நம்புகின்றேன்.
எனவே எவ்வளவு பெரிய இனவாதியாக இருந்தாலும் அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பீச்சா பேகர் சாப்பிடுவதில்லை காலையில் பால்சோறு அல்லது கஞ்சி அல்லது இட்லி. தோசை மதியம் சிவப்பு அரசி அல்லது வெள்ளை அரிசி எனவே எந்த இனவாதிக்கே மதலாதிக்கே இந்த அரிசி என்னுடைய இனம் சார்ந்த விவாயிகள் தான் உற்பத்தி செய்தனர் என பிரிக்க முடியுமா?
எனவே எந்த இனவாதியாலும் சொல்லமுடியாது அது தான் விவசாயிகளின் சக்தி எனவே லிவசாயிகளான உங்களது சக்தியையும் உங்களுடைய உழைப்பையும் அங்கீகரிக்கின்ற வகையில் இன்று ஜனாதிபதியின் ஆலோசனையின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டதை ஆரம்பித்துள்ளோம் இது 350 பேருக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் 3 ஆயிரம் பேருக்கு வழங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம் என்றர்.