அமெரிக்கா, கொலராடோவில் மோரிசன் அகழ்வாராய்ச்சி பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் படிவம் ஜேசன் கூப்பர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
11 அடி உயரமும், மூக்கிலிருந்து வால் வரை 27 அடி நீளமும் கொண்ட இந்த ஸ்டெகோசொரஸ் டைனோசருக்கு அபெக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்த டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.
இதன்போது டைனோசரின் எலும்புக்கூடு 44.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்படடது.