சிறுவர்களிடையே மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளதால் சிறுவர்களுக்கு முன்பாக புகைப்பிடிப்பதைத் தவிர்க்குமாறு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
இன்புளுவன்சா போன்ற வைரஸ் தொற்றுகளைத் தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது.
அத்துடன், மூச்சுத்திணறலின்போது உச்சகட்ட ஒலி வெளிப்படுவதுடன், சுவாசப்பாதை சுருங்குவதால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.
புகை மூச்சுத்திணறல் அறிகுறிகளை மோசமாக்குவது மட்டு மல்லாது மீண்டும் மீண்டும் சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
சிறுவர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறலை குறைப்பதற்கு புகை அற்ற சூழலை உருவாக்குவது முக்கியமானது.
இந்த நிலையில் நாள்பட்ட இருமல் மற்றும் தொடர்ந்து மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் பெற்றோர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.