காணி சீர்த்திருத்து ஆணைகுழுவுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரை காணி உறுதியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நடமாடும் சேவையின் மூலம் தங்களது ஆவனங்களைப்பெற்றுக்கொள்ளமுடியும் என காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.விமல்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டத்தில் காணி உறுதிகள் அற்ற மக்கள் தமக்கான உறுதிகளைப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 20இலட்சம் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் கீழ் காணி சீர்த்திருத்து ஆணைகுழுவினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் காணி சீர்த்திருத்து ஆணைகுழுவிற்குரிய இதுவரையில் காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்காதவர்களுக்கான நடமாடும் நேற்று முதல் மாவட்ட செயலக காணி சீர்த்திருத்து ஆணைகுழுவின் அலுவலகத்தில் நடைபெற்றுவருகின்றது.
கொழும்பு காணி சீர்த்திருத்து ஆணைகுழுவின் தலைமையகத்திலிருந்து வருகைதந்த அதிகாரிகள் இந்த நடமாடும் சேவையினை முன்னெடுத்துவருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை வரையில் மாலை வரையில் இந்த சேவை வழங்கப்படுவதாகவும் இதுவரையில் தமது காணி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளமுடியாதவர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் விமல்ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.