விவசாயத்தை தொழில்நுட்பத்தின் ஊடாக நவீன படுத்தல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தலுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விவசாயிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விவசாயத்தை நவீனப்படுத்தல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் உதவிகளை வங்கிகள் ஊடாக வழங்குவதற்காக விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்திஇராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (20) இடம் பெற்றது.
இதன் போது வாகரை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கருத்து தெரிவித்ததுடன் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நிலக்கடலை விவசாயத்தை நவின மயப்படுத்தி புதிய தொழில் நுட்பத்தை இப் பிரதேச மக்களிற்கு வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை, மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஷ்குமார், மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் உட்பட வாகரை பிரதேச விவசாயிகள் கலந்து கொண்டனர்.