23 வருடங்களுக்கு முன்னர் பிரான்சிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் முதலாவது ஏ 330-200 ரக விமானம் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில் சொந்த நிறுவனத்திடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளது.
விமானங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது.
ஹீத்ரோ, பிராங்பேர்ட், மெல்போர்ன் மற்றும் மொஸ்கோ வழித்தடங்கள் உள்ளிட்ட நீண்ட இடங்களுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு, இதுவரை 100,000 விமான மணி நேரத்தை நிறைவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தில் 18 வணிக வகுப்பு பயணிகளும், 251 சாதாரண வகுப்பு பயணிகளும் அமர்ந்து செல்லும் வசதி உள்ளதுடன், விமானம்சேவை செய்யக்கூடிய நிலையில் உள்ளது.
எனினும் குத்தகை காலாவதியான ஓரிரு நாட்களில் பிரான்ஸ் ஏர்பஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.