அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.
குறித்த தகவலை நேற்று (24) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விசேட கொடுப்பனவுகள் 2024 செப்டெம்பர் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசு சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை ஒரேயடியாக தீர்க்க குழு நியமிக்கப்பட்டது.
இதற்கிடையில் அந்த குழுவின் ஆலோசனைப்படி, செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாய் விசேட கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும், சுமார் 7 லட்சம் பேர் இதனால் பலன் பெறுவார்கள் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பின் ஓய்வூதிய திருத்தம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.