Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம்!

வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை கண்டித்தும், அவரை மீண்டும் வாகரை பிரதேச செயலகத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (24) மேற்கொள்ளப்பட்டது.

பிரதேச செயலாளர் ஜீ.அருணன் அரசியல் பழிவாங்களுக்குள்ளாக்கப்பட்டு நேற்று (24) தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்ட்டுள்ளதாகவும், இவர் தங்களது பிரதேச செயலகத்திற்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் நேற்று காலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

எங்கள் பிரதேச செயலாளாரின் இடமாற்றத்தை அரசு கவனத்தில் எடுக்குமா?
பிரதேச செயலாளர் சேவைக் காலம் முடியாமல் இடமாற்றம் செய்யக் காரணம் என்ன?
வாகரை பிரதேச மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

இதன்போது வாகரை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதுடன், பிரதேச செயலக வாயிலை மூடி குழப்ப நிலை ஏற்படாதவாறு கடமையில் ஈடுபட்டனர்.

இதன்போது 2 மணித்தியாலங்கள் பிரதேச செயலக நிர்வாகப் பணிகள் தடைப்பட்டு காணப்பட்டது.

போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை அரசாங்க அதிபர், பொது நிர்வாக அமைச்சு,பிரதமர்,ஜனாதிபதி உள்ளிட்டோர்களுக்கு முகவரியிட்டு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்த்தர் வ.சிவரஞ்சனிடம் வழங்கினார்கள். அதனை பெற்றுக்கொண்டவர் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக ஊடகங்களுக்கு தமது கருத்தினை தெரிவித்தார்.

அதேசமயம் பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒண்றிணைந்து இவ் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்
செய்திகள்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்

August 22, 2026
மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்
செய்திகள்

மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

August 22, 2026
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக கங்கா ஆரத்தி!
உலக செய்திகள்

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக கங்கா ஆரத்தி!

August 22, 2026
லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்
செய்திகள்

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்

August 22, 2026
சுரேஷ் சலேயை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் மனைவி கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேயை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் மனைவி கோரிக்கை!

August 22, 2026
இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!
செய்திகள்

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

August 22, 2026
Next Post
கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தார் ஜோ பைடன்!

கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தார் ஜோ பைடன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.