Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஓட்டமாவடி” ஆவணப்படம்; வெக்கமில்லையா என சஜித் கேள்வி!

“ஓட்டமாவடி” ஆவணப்படம்; வெக்கமில்லையா என சஜித் கேள்வி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொவிட் -19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கம் மன்னிப்பு கோரியமை தொடர்பில் நேற்றைய தினம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது, அண்மையில் வெளியிடப்பட்ட ‘ஓட்டமாவடி’ என்ற கொரோனா ஆவணப்படம் தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. கொவிட் -19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அறிவித்திருந்தது.

அது நல்லது. இப்போது அமைச்சரவையில் இருந்தவர்களும் அன்று கையை உயர்த்தினர். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போது முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையினை சிதைக்கும் வகையில் இனவாதத்தினை தூண்டும் வகையில் மத வாதத்தினை முன்னெடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து எரிப்பதா புதைப்பதா என்று வரும் போது தவறான தீர்மானத்தினை எடுத்திருந்தனர்.

நாங்கள் கொஞ்சமாவது அரசின் நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இப்போதாவது அரசுக்கு புரிந்ததே.. ஆனால், யார் கூறி இதை செய்தோம் என்று பகிரங்கப்படுத்த வேண்டும். யார் இவற்றுக்கு ஆலோசனை வழங்கியது என்பது தொடர்பில் வெளிக் கொணர வேண்டும்..

அரசியல் தலைமைகளை காப்பாற்ற இப்போது ஆவணப்படம் தயாரிக்கின்றார்களாம்.. வெட்கமாக இல்லையா?, அந்த நாட்களில் வீதியில் இறங்க வில்லை. நாம் தான் முஸ்லிம் மக்களுக்காக வீதியில் இறங்கினோம். குரல் கொடுத்தோம். நாமே அதனை எதிர்த்தோம்..

வலுக்கட்டாயமாக முஸ்லிம் மக்களின் உடல்களை எரித்தமைக்கு அவர்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட வேண்டும். சும்மா மன்னிப்புக் கோரி இதிலிருந்து விலகியதாக நினைக்க வேண்டாம்..” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!
செய்திகள்

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

July 21, 2026
உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

July 21, 2026
Next Post
தீங்கு விளைவிக்கும் புகையை வெளியிடும்  வாகனங்கள் கருப்புப் பட்டியலில்!

தீங்கு விளைவிக்கும் புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்புப் பட்டியலில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு