5 நாட்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் இன்று (26ஆம் திகதி) வரையில் இந்த 12 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய 05 பெண்கள் உட்பட 12 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.