காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.