இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போது (26) குறித்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுவேளை குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் தலைமறைவான சந்தேக நபர் ஒருவரையும் தீவிரமாக தேடி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழு புது மடத்திலிருந்து மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1 கோடி 80 இலட்சம் என்றும் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சரக்கு வாகனம் மூலமாக ராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குறித்த வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.