வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் களுத்துறை, மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமி ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று உயிரிழந்த சிறுமி வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை பல வர்ண மின்கலங்களால் அலங்கரித்துக்கொண்டிருந்துள்ளார்.
பின்னர் இந்த சிறுமி பல வர்ண மின்கலங்களுக்கு மின்சாரத்தை வழங்க முயற்சித்த போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுமி பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் வேிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.