தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை அடைய வேண்டும், பெருமை கொள்கின்றோம் என ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இன்று வடக்கு கிழக்கில் இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்தவரையில் தமிழரை வாக்குகள் மிகவும் பெருமதிக்க மிக்க வாக்குகளாக மாறி இருக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலத்தில் ஏற்பட்ட வலியை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் என்பதன் முதல் படியாக ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்து எமது குரல்களை வெளிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொது அமைப்புகள் என்பன ஒன்று சேர்ந்து சில முடிவுகளை எடுத்து இருக்கின்றது..
பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இது நமது ஆரம்பப்படி. இவற்றில் பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுகின்றது. அதை அந்த தலைமைகளும் அந்த அமைப்புகளும் கூடி முன்னேற்றகரமான முடிவுகளை எடுக்கும்.
தேர்தல் தொடர்பான விடயத்தில் ஒரு முன்னேற்றகரமான விடயத்தை அறிவிப்பார்கள் ஆனால் மக்களாகிய நாங்கள் தயாராக இருக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக, தமிழ் மக்களின் அதிகார பரவல் தொடர்பாக, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக, பொருளாதார கொள்கை தொடர்பாக, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக, திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பாக, மகாபலி காணி தொடர்பாக பலதரப்பட்ட விடயங்களை எவ்வாறு இவர்கள் கையாள போகின்றார்கள் என்பதனை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பிரச்சனை கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்க்கப்படவில்லை, கல்முனை தமிழ் பிரதேச செயலக தொடர்பான விடயங்கள் கூட தீர்க்கப்படவில்லை, வீர முனை தொடர்பான விடைகளும் தீர்க்கப்படவில்லை, இதே போன்று மாவட்ட ரீதியாக வளங்களை சூறையாடுவது, வளங்களை அழிப்பது போன்ற பல தரப்பட்ட விடயங்கள் விகிதாசார ரீதியான அபிவிருத்தி வேலைகளை செய்வது போன்ற பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போன்ற பல விடயங்களை நாங்கள் எதிர்நோக்கி இருக்கின்றோம். இவைளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் காணப்படுகிறது.
எதிர்காலத்தில் இந்தத் தேர்தல் தொடர்பான விடயங்களில் நாம் வெற்றி கொள்ள முடியுமா என்பதனை ஆராயப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. ஆகவே எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் ஆனால் இன்று வடக்கு கிழக்கில் இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்தவரையில் தமிழரை வாக்குகள் மிகவும் பெருமதிக்க வாக்குகளாக மாறி இருக்கின்றது.
தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை அடைய வேண்டும் பெருமை கொள்கின்றோம்.
இன்று உள்ள நிலைமைகளில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கான பிரச்சார வேலைகளில் சில திணைக்களங்கள் அரச நிர்வாகத்தை பயன்படுத்தின்றனவா என்கின்ற சந்தேகம் தமக்கு எழுவதாகவும்அவர் தெரிவித்தார்.