ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் சுற்றுநிரூபமொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் தேர்தல் காலத்தில் குறித்த சுற்றுநிரூபத்திற்கமைய செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலின் போது அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அடுத்த மாதத்திலிருந்து ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வெளி தரப்பினரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.