வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
2025 முதல் காலாண்டில் தனியாருக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,
“2022ல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதே இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் நோக்கமாகும்.
நாட்டின் பொருளாதார மாற்ற சட்டத்தின்படி நாட்டை பராமரிப்பதே அனைத்து மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஆகஸ்ட் மாதத்திற்குள், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை எப்படி படிப்படியாக நீக்குவது என்பது குறித்து தெரிவிக்கப்படும். முதல் சுற்றுக்கு, வணிக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் தொடர்பான வாகனங்களை இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.