தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2000 ரூபா மானியத் தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானம் நேற்று (29) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 2000 ரூபா மானியம் வழங்குவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியை அதிகரிக்க அந்த தொகை போதுமானதாக இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் பருவத்தில் இருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளது.
தேயிலை உரத்தின் விலையை 2000 ரூபாவினால் குறைத்து, உற்பத்திச் செலவு மற்றும் இலாப விகிதத்தை கருத்திற்கொண்டு அரச உர நிறுவனம் விசாரணை நடத்தி விலையை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.