Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி!

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி!

2 years ago
in செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடிவரும் அம்மாக்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

நேற்றைய தினம் (30) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி. அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

ஊடக சந்திப்புக்களை செய்தமை, பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான போராட்டம், மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் போராட்டத்தில் கலந்து கொண்டமை, பல்கலைக்கழகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டமை, ஜக்கிய நாடுகள் சபையில், இலங்கை அரசாங்கதிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை, சர்வதேச பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றமை, புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுகின்றமை, புலிகளை மீள் உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விசாரணையின் போது, ‘குற்றச்சாட்டப்பட்டவர்களை விசாரிக்காது, பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கும் முனைப்புடன் அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் செயற்பட்டுவருகின்றன. எமது போராட்டங்களை முடிக்க நினைக்கின்றன.

எமது போராட்டத்தினை எங்களை அச்சுறுத்துவதன் ஊடாக முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைக்கின்றார்கள். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் எமது உயிர்கள் போனாலும் எமது போராட்டம் தொடரும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் (VIDEO) -  தமிழ்வின்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு