கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (29) மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில், கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநாளில் கிளிநொச்சி – புளியம்பொக்கணை கலவெட்டி திடல் பகுதியில் அனுமதி இன்றி ஜேசிபி இயந்திரம் மூலம் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் ஜேசிபி இயந்திரமும் மற்றும் டிப்பர் ரக வாகனமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடயப் பொருட்கள் நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர காவல் நிலைய பொறுப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.