யூடியூப் நிறுவனம் (YouTube) யூடியூப் சேனல்களுக்கான மானிடைஷேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை (YouTube Monetization Rules And Policies) மாற்றியிருக்கிறது. இந்த பாலிசிகள் மூலம் 500 சப்ஸ்கிரைபர்கள் கொண்ட யூடியூப் சேனல்கள் கூட பணம் சம்பாதிக்க முடியும். இதுகுறித்த விவரம் இதோ.
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் ஆப் (YouTube App) பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்களிடம் யூடியூப் பயன்பாடு பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது. இந்த யூடியூப்பில் இல்லாத வீடியோக்களே கிடையாது என்றே சொல்ல வேண்டும். சமையல் குறிப்புகள் தொடங்கி, தொழில்நுட்பங்கள் வரையில் வீடியோக்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த யூடியூப், இப்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூடியூபர்களுக்கு மாத சம்பளம் தரும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. ஒரு யூடியூப் சேனல் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு திறமை மட்டுமே போதும், முதலீடு தேவையில்லை. இந்த திறமையை மட்டுமே வைத்து பல யூடியூபர்கள், மாதம் பல லட்சம் ரூபாய்களை வருவாயாக ஈட்டிவருவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். ஆனால், இவ்வாறு பணம் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. யூடியூப் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற வேண்டும்.
உங்களது சேனலின் சப்ஸ்கிரைபர்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதோடு, உங்கள் வீடியோக்களை லட்சக்கணக்கான மக்கள் பார்க்க வேண்டும். இப்படி பல்வேறு மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை, யூடியூப் நிறுவனம் (YouTube Monetization Rules And Policies) வைத்துள்ளது. அதாவது, ஒருவர் யூடியூப் சேனல் தொடங்கிய பின்பு, அந்த சேனல் குறைந்தது 1,000 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்க வேண்டும்.
ஒரு ஆண்டில், நீங்கள் பதிவிடும் வீடியோக்களை 4,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது 90 நாட்களுக்கு யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 10 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இதையெல்லாம் உங்களது சேனல் செய்திருந்தால், அது மானிடைசேசன் செய்யப்படும். இதனால் மாதம், மாதம் பணமும் கிடைக்கும்.
இந்த அளவீடுகள், இப்போது அதிரடியாக குறைக்கப்பட்டு புதிய யூடியூப் மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகள் (YouTube Monetization Rules And Policies) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய யூடியூப் மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளின்படி, யூடியூப் சேனலுக்கு 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலே போதும். 90 நாட்களில் 3 வீடியோக்களை பதிவிட்டிருக்க வேண்டும். இந்த வீடியோக்களை 3,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 3 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இந்த அளவீடுகள் இருந்தாலே பணம் சம்பாதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யூடியூபர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த விதிகள் முதலில் அமெரிக்கை, கனடா, தைவான் மற்றும் தென்கொரியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.