இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சண்முகம் குகதாசன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் (31) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் பல்வேறு தேவைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் குகதாசன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சித்தாவல்கள் மாறி மாறி இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த சந்திப்பானது அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பானதா என அரசியல் ஆய்வாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.