Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம்; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் சூளுரை

ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம்; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் சூளுரை

1 year ago
in அரசியல், செய்திகள்

பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவூர், இறக்காமம், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, நாவிதன்வெளி போன்ற இடங்களில் இருந்து மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக கல்முனை தொகுதியில் இருந்தும் எதிர்காலத்தில் படுதோல்வியுடன் மு.கா வெளியேறும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 93 உயர்பீட உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கல்முனைக்கு வந்தாலும் ஹரீஸின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியுடன் வெளியேறி செல்வார்கள் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியா கான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் படிப்படியாக அழிந்து இப்போது ஹக்கீம் காங்கிரஸாக மாறியிருக்கிறது. இதனால் ஹக்கீம் காங்கிரசுக்கு இம்முறை முஸ்லிம் வாக்காளர்கள் நல்ல பாடம் படிப்பித்திருக்கிறார்கள். ஒரு சிலரின் தனியார் கம்பெனி போன்று இயங்கும் இவர்களின் ஆணவத்தை முஸ்லிம் மக்கள் நிராகரித்து ஹக்கீமின் தலைமைத்துவத்தை தோற்கடித்திருக்கிறார்கள். அவருக்கு மாற்றீடான தலைமைத்துவமாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

வாயிருப்பவர்களிடம் வாக்கு இல்லை. வாக்கு இருப்பவர்களிடம் வாயில்லை. எனும் நிலையில் ஹக்கீமின் பின்னால் இருப்பவர்கள் வாயை மட்டும் வைத்துக்கொண்டு இருப்பவர்கள். வாக்கில்லாதவர்களே என்பதை மக்கள் இம்முறை நிரூபித்துள்ளார்கள். தலைவரின் சூழ்ச்சியால் கட்சிக்குள் பிரமுகர்களிடையே பிரச்சினையை உருவாக்கி அதில் அவர் குளிர்காய்ந்து கொள்கிறார். அக்கரைப்பற்று மக்கள் அதாஉல்லாவின் பக்கம் ஒன்றிணைந்தது போல, முஷாரஃபின் பின்னால் பொத்துவில் மக்கள் ஒன்றிணைந்தது போல, மாஹிருடன் சம்மாந்துறை மக்கள் ஒன்றிணைந்தது போல, கல்முனை தொகுதி மக்கள் ஹரீஸுடன் இருக்கிறார்கள் என்பதை ஒரு தேர்தல் வந்தால் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடான ஹக்கீம் காங்கிரசை தோற்கடிக்க சகோதரர் ஹரீஸின் அணியில் இணைந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கல்முனை தொகுதியில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபையிலும், மாகாண சபையிலும் நாங்கள் ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம். கல்முனையையும்- சாய்ந்தமருதையும் கசப்புணர்வுடன் மாத்தியமைக்க ஹக்கீம் காங்கிரஸ் செய்த சதிகளை நாங்கள் அறிவோம். பொத்துவில் மக்கள் மு.காவை வெறுத்து முஷாரப்புடன் கைகோர்த்துள்ளார்கள். பொத்துவிலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முஷாரப் ஆட்சியமைப்பாராயின் அடுத்த முறை அவர் ஒரு வட்டாரத்தையும் வெல்ல மாட்டார்.

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்கும். அவர்களை பலப்படுத்தி சமூக தேவைகளை அடைந்து கொள்வதே புத்திசாலித்தனம். அதை விடுத்து ஹக்கீம் காங்கிரஸின் பின்னால் சென்று நாம் நஷ்டமடைய முடியாது என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள தடை

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.