பங்காளதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் மோதலாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால், பங்காளதேஷில் நாடு முழுவதும் இணைய சேவைகளை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.