குருநாகல், மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 3476 விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க கட்டார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சிடம் இந்த உர கையிருப்பு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
எமது நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்டார் தொண்டு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் குருநாகலில் 1476 விவசாயிகளுக்கும், மாத்தளையில் 1000 விவசாயிகளுக்கும், மொனராகலையில் 1000 விவசாயிகளுக்கும் மரக்கறிச் செய்கைக்காக இந்த உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதன் கீழ் யூரியா, மண் உரம், பண்டி உரம் தலா 25 கிலோ கிராம் மூட்டை ஒரு விவசாயிக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.