பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷின் மாணவர் தலைவர்கள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இடைக்கால அரசை அமைப்பதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தைக் கலைப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பது மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.