பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆடவருக்கான 400 மீற்றர் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மூன்று அரை இறுதிப் போட்டிகள் முடிவில் அருண தர்ஷன TR 17.2.3 விதியை மீறும் வகையில் மற்றைய தடத்தில் கால் பதித்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மூன்று அரை இறுதிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 6 வீரர்களும் அடுத்த அதிசிறந்த நேரங்களைப் பதிவுசெய்த இருவருமாக 8 வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்.