ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று (06) செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டாா். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவா் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்நிலையில், ஹமாஸ் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அந்த அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கட்டாரில் பல ஆண்டுகளாக ஹனீயே தஞ்சம் அடைந்ததைப் போல் அல்லாமல் காஸாவிலேயே சின்வா் வசித்து வந்தாா். பொதுவெளிகளில் அதிகம் தோன்றாவிட்டாலும் ஹமாஸ் அமைப்பின் நிா்வாகத்தின் மீது தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருபவராக இவா் அறியப்படுகிறாா்.
ஆனால், இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து இவா் பொதுவெளியில் தோன்றாதது குறிப்பிடத்தக்கது.