Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவி மீது துஷ்ப்பிரயோக வார்த்தை பிரயோகம்; தலைமறைவாகி வாழ்ந்து வந்த மட்டு பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியருக்கு விளக்கமறியல்!

மாணவி மீது துஷ்ப்பிரயோக வார்த்தை பிரயோகம்; தலைமறைவாகி வாழ்ந்து வந்த மட்டு பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியருக்கு விளக்கமறியல்!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு, மட்டக்களப்பு உயர்தர மாணவி ஒருவர் தனக்கு சித்திரபாட ஆசிரியர் ஒருவர் வாய்மூலமாக பாலியல் துஷ்ப்பிரயோக வார்த்தைகளை பிரயோகித்து வருவதாக செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிசாரின் விசாரணைக்கு செல்லாது, தலைமறைவாகி வாழ்ந்து வந்த மட்டக்களப்பை சேர்ந்த இராஜாங்க அமைச்சரின் கட்சி உறுப்பினர் கோபிநாத்தை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (07) உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டு பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவருக்கு சித்திரப்பாடம் கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வாய் மூல பாலியல் துஸ்பிரயோக வார்த்தைகளை பிரயோகித்து அவரை தொந்தரவு செய்து வந்துள்ளதுடன், இது தொடர்பாக எவருக்கும் அறிவித்து என்னை ஒன்றும் செய்யமுடியாது அவ்வாறு ஏதும் செய்ய முயன்றால் “உயர்தர மாணவி பாலியல் துஸ்பிரயோகம்” என முகநூலில் பதவிடுவேன் எனவும், தான் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர் எனவும், என்னை எதிர்த்தால் இந்த மாவட்டத்தில் இருக்கவே முடியாது என அச்சுறுதியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அவரது வகுப்பாசிரியர் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்துவந்துளார். இந்த நிலையில் கடந்த மாதம் 11ம் திகதி குறித்த ஆசிரியர் குறித்த பாடத்திட்டத்தில் இல்லாத படங்களை வரையுமாறும், இல்லாவிட்டால் வகுப்பறையில் இருந்து வெளியேறுமாறும் தெரிவித்த நிலையில் மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறி அதிபரிடம் முறையிட சென்ற நிலையில் அவர் இல்லாத நிலையில் வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த அநீதியை பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் பாடசாலை பிரதி அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்த நிலையில் அவர் பாடசாலை அதிபர் கவனத்திற்கு கொண்டுசென்று, பெற்றோரிடம் கடிதம் ஒன்றைவாங்கி தாங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு பெற்றுதருவதாக உறுதியளித்துள்ளனர்.

அடுத்தநாள் மீண்டும் பாடசாலைக்கு மாணவி சமூகமளித்த போது குறித்த ஆசிரியர் மீண்டும் மீண்டும் மாணவியின் கல்வி கற்கும் சூழலை குழப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ஜனாதிபதிக்கு சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை மாணவி எழுதி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி உடன் விசாரணை செய்யுமாறு பொலிசாருக்கு கடந்த 22ம் திகதி பணிப்புரை விடுத்ததையடுத்து, பொலிசார் பாதிக்கப்பட்ட மாணவியிடமும் பாடசாலை அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வாக்கு மூலத்தை பெற்ற நிலையில், பொலிஸ் நிலையத்துக்கு குறித்த ஆசிரியரை வருமாறு அழைக்கப்பட்டபோதும் அவர் பொலிஸ் நிலையம் செல்லாது தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளார்.

குற்றவியல் சட்டம் 345 ஆம் பிரிவின் கீழ் குறித்த வழக்கு தாக்குல் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகிய ஆசிரியர் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையிலான சட்டத்தரணிகள் ஊடாக முன்நகர்வு பத்திரம் விண்ணப்பித்து நீதின்றில் சரணடைந்தார்.

இந்த வழக்கு விசாரணையை நீதவான் எடுத்துக் கொண்ட போது பாதிக்கப்பட் சிறுமி சார்பில் சட்டத்தரணி கமலநாதன் ஆஜராகி குறித்த ஆசிரியருக்கு பிணைவழங்க வேண்டாம் என தெரிவித்ததுடன், வழக்கு தொடர்ந்த மட்டக்களப்பு பொலிசாரும் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் மட்டு நீதவான் குறித்த ஆசிரியரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேசமயம் சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சரிடம், சபாநாயகரிடமும் நேற்றைய பாராளுமன்ற அமர்வில் சாணக்கியன் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்ததும் மேலும் குறிப்பிடத்தக்கது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanewsதுஷ்ப்பிரயோகம்

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது
செய்திகள்

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

May 12, 2025
இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி; அஜித் ராஜபக்‌ச
செய்திகள்

இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி; அஜித் ராஜபக்‌ச

May 12, 2025
முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்

May 12, 2025
இன்றும் நடைபெற்ற தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்
செய்திகள்

இன்றும் நடைபெற்ற தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

May 12, 2025
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள தடை
செய்திகள்

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள தடை

May 12, 2025
ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம்; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் சூளுரை
அரசியல்

ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம்; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் சூளுரை

May 12, 2025
Next Post
இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் பலி!

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.