கற்பிட்டி தோரடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி விஜய கடற்படை நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே இத்தங்கத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 கிலோ 740 கிராம் நிறையுடைய இந்த தங்கம் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் கடற்படையினரின் தேடுதலின் காரணமாக பின்னர் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கபடுவதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த தங்கம் பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.