Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடொன்றில் சித்திரவதைக்குள்ளாகும் பெண்; தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!

வெளிநாடொன்றில் சித்திரவதைக்குள்ளாகும் பெண்; தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!

2 years ago
in செய்திகள்

சிரியாவில் வீட்டு வேலை செய்யும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருநாகல் மாவட்டம் – தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத துஷாரிகா கல்தேரா என்ற பெண்ணே இந்த சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பெண் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்கள் அவர் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன், பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் மற்றும் 9 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்காக டுபாய் நகருக்கு சென்ற அவர், அங்கு ஒரு வீடொன்றில் பாதுகாப்பாக இருந்துள்ளார்.

எனினும், அந்த வீட்டு உரிமையாளர்கள் வேறு நாட்டிற்கு சென்றமையால் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டை துஷாரிகாவிடம் கொடுத்து அவரை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

விமான டிக்கெட் கையிலிருந்த போதும் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம், அவரை சிரியாவில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்களிடம் விற்றுள்ளது.

தற்போது சிரியாவில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் இவர், கடும் வன்முறைகளுக்கு மத்தியில் பல மாதங்களாக சம்பளம் இன்றி வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பளம் குறித்து விசாரித்த போது, வீட்டில் இருந்த பெண்கள் துஷாரிகாவை கடுமையாக தாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் துஷாரிகா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
அமைச்சுப் பதவிகளை இழக்க போகும் இரு அமைச்சர்கள்; வெளியானது நீதிமன்ற தீர்ப்பு!

அமைச்சுப் பதவிகளை இழக்க போகும் இரு அமைச்சர்கள்; வெளியானது நீதிமன்ற தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு