ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.எஸ்.எம்.எம். முஷாரப், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.இஷாக் ரஹ்மான், முஸ்லிம் தேசியக் கூட்டணியின் எம்.பி.அலி சப்ரி ரஹிம் ஆகியோர் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பம்பலபிட்டியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.