மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் 216வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நேற்று(15) நிறைவடைந்தது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 216 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேராலயமான மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் விண்ணேற்பு மாதா பெருவிழா கடந்த 6 ஆம் திகதி பங்குதந்தை நிக்சன் அடிகளார் தலைமையில் கொடியேற்றப்பட்டு ஆரம்பமாகி நவ நாட்காலங்களில் தினமும் மாலை அருளுரைகளுடன் திருப்பலிகள் இடம்பெற்றன.
ஆலய வருடாந்த திருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஜோர்ச் ஜீவராஜ் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஆராதனை வழிபாடுகளுடன் ஆலய திருவிழா நிறைவுபெற்றது. திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மறை மாவட்ட பங்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.