மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்முறையாக 21 வயதுக்குட்பட்ட இளம் கடினப் பந்து கிரிக்கட் வீரர்களுக்கான வெற்றி பிக் பாஸ் (Batti big Bash) ஜூனியர் ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றை மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தி சபை நடத்துகின்றது
வெற்றி பெறுகின்ற அணிக்கு 5 இலட்சம் ரூபா பணப் பரிசை வழங்கப்படுகின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் விளையாட்டு வீரர்கள் தமது திறமையினை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த சுற்றுப்போட்டி நடைபெறுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு முதல் தெற்கு வரையாக தமிழ் பேசும் இளம் வீரர்களை கொண்ட 5 அணிகளாக பிரிக்கப்பட்டு 9 போட்டிகளாக விளையாடுகின்ற Batti Big Bash ஜூனியர் ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தி சபையின் தலைவர் லோபஸ் தலைமையில் நடைபெறுகின்றது
Batti Big Bash ஜூனியர் ரி20 கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (17) மாணவர்களின் பேண்டு வாத்தியம் இசைக்கப்பட்டு, அதிதிகள் அழைத்து வரவேற்கப்பட்டு ஆரம்பமானது.
நிகழ்வில் கிராமிய விதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளர் பூபாலப் பிள்ளை பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இதில் சுற்றுப் போட்டிக்கான அனுசரணையாளர்களான மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.