ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு செலவிடப்படும் தொகை அதிகபட்சமாக 20 ரூபாவிற்கு உட்பட்டதாக்கக் கோரி ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார்.
தேர்தல் செலவுக் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வாக்காளருக்கு 300 ரூபா மற்றும் 250 ரூபா என பரிந்துரைத்தனர். தேசிய மக்கள் சக்தி வாக்காளருக்கு 200 மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 250 ரூபாவை பரிந்துரைத்ததாகவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் பரிந்துரைத்தபடி தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட பெருந்தொகையில் பாரிய சிக்கல் இருப்பதாகவும், அதிகபட்ச தொகையை 20 ரூபாவாக தீர்மானிக்குமாறு கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.