உலகில் முதல் வியர்க்கக் கூடிய ரோபோ அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
அரிசோனா மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து தெர்மெட்ரிக்ஸ் என்ற நிறுவனம் வியர்வை, நடுக்கம் மற்றும் மூச்சு விடுதல் போன்ற உணர்வுகள் அடங்கிய ஒரு புதுவித ரோபோவை உருவாக்கி உள்ளனர்.
இந்த ரோபோ அன்ட்டி (ANDI) என்று அழைக்கப்படுகிறது.
அரிசோனா மாநில பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான கொன்ராட் ரைகாசெவ்ஸ்கி கூறுகையில், அன்ட்டி ரோபோவானது மனித உடலில் வெப்பம் மற்றும் தீவிர வெப்பநிலையின் விளைவுகளை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனித உடலில் காணப்படும் சிறிய துளைகள் போல இதில் 35 தனித்தனியாக கட்டுப்படுத்தக்கூடிய மேற்பரப்புகள் உள்ளன.
இதனால் இந்த ரோபோவானது வெவ்வேறு வெப்ப நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறனை கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.