Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மிதந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மிதந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்

46 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் நாசா விஞ்ஞானி அணில் மேனன் மற்றும் கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜோஷுவா ஆகியோர் இன்று விண்வெளி நடை (Spacewalk) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் உயரத்தில் சுற்றுவட்டப் பாதையில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையம், விண்வெளி ஆய்வுகளுக்கான முக்கிய ஆய்வகமாகச் செயற்பட்டு வருகிறது.

மணிக்கு சுமார் 28,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்வெளி நிலையம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருகிறது.

இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விண்வெளி நிலையத்தின் வெளிப்புறப் பகுதிகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்வதற்கும், பழுதடைந்த உபகரணங்களை மாற்றுவதற்கும் விண்வெளி வீரர்கள் நிலையத்திற்கு வெளியே சென்று பணியாற்றுவது வழக்கமாகும். இவ்வாறான நடவடிக்கையே விண்வெளி நடை என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று இந்திய நேரப்படி மாலை 4 மணியளவில் விண்வெளி நடையை ஆரம்பித்த அணில் மேனன் மற்றும் ஜோஷுவா ஆகியோர், விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த பழைய சூரிய மின்தகடுகளை அகற்றி, புதிய மின்தகடுகளைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள இந்த மின்சக்தி உபகரணங்கள், அறிவியல் ஆய்வுகள், உயிர் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட விண்வெளி நிலையத்தின் அத்தியாவசியச் செயற்பாடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விண்வெளி நடை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள் குறித்த காணொளிக் காட்சிகளையும் நாசா வெளியிட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!
செய்திகள்

இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!

October 30, 2026
எதிர்காலத்தில் பணத்தைச் சேமிப்பது அர்த்தமற்றதாகிவிடும்; எலான் மஸ்க் அதிரடிக் கருத்து!
உலக செய்திகள்

எதிர்காலத்தில் பணத்தைச் சேமிப்பது அர்த்தமற்றதாகிவிடும்; எலான் மஸ்க் அதிரடிக் கருத்து!

October 30, 2026
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்!
செய்திகள்

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்!

October 30, 2026
இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது
செய்திகள்

இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது

October 30, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

October 30, 2026
சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

October 30, 2026
Next Post
எதிர்காலத்தில் பணத்தைச் சேமிப்பது அர்த்தமற்றதாகிவிடும்; எலான் மஸ்க் அதிரடிக் கருத்து!

எதிர்காலத்தில் பணத்தைச் சேமிப்பது அர்த்தமற்றதாகிவிடும்; எலான் மஸ்க் அதிரடிக் கருத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு