ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸை தற்காலிகமாக இடைநிறுத்த அந்த கட்சி தீர்மானித்துள்ளது.
இது குறித்து எழுத்து மூலம் அவருக்கு அறிவிக்கப்படும் என ஓட்டமாவடியில் நேற்றைய தினம் (19) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்றையத்தினம் அவருக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம் நிசாம் காரியப்பரினால் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.