பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.சி.சி.யின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லேவின் பதவிகாலம் எதிர்வரும் நவம்பருடன் முடிவடையும் நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேட்புமனுக்களை ஒகஸ்ட் 27ஆம் திகதிக்குள் அளிக்கலாம் என்று ஐ.சி.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.சி.சி.யின் புதிய தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், ஐ.சி.சி விதிகளின்படி, தலைவர் தேர்தலுக்கு 16 வாக்குகள் தேவை. தற்போது இந்த 16 வாக்குகளும் ஜெய் ஷாவுக்கு உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.