வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி, மலையக தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பிய பின்னர் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. மலையக தமிழ்க் கட்சிகள், ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மலையக பகுதிகளுக்கான அபிவிருத்திகள் மற்றும் உரிமைகள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுகளை ஆரம்பித்துள்ள நிலையில் மலையக தமிழ் கட்சிகளும் தொடர்ச்சியாக ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.