இலங்கை பெற்றோலியம் ஸ்ரொரேஜ் டெர்மினல் நிறுவனத்தினால் தீயணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு தொகைச்சாலை அதிகாரி ரபியதீன் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் இன்று (23) திகதி இடம் பெற்றது.
இலங்கை பெற்றோலியம் ஸ்ரொரேஜ் டெர்மினல் நிறுவனத்தினால் 2024 ஆண்டுக்கான தீயணைப்பு பயிற்சி கருத்தரங்கு இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றது.
இதன் போது அனர்த்தங்கள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முற்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடை முறைகள் தொடர்பான விரிவான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.
மேலும் அனர்த்த வேளையில் உடனடியாக மக்களை பாதுகாப்பதற்கு தேவையான நுட்பமுறைகள் மற்றும் ஆலோசனைகள் நிபுணர்களினால் இதன் அளிக்கை செய்து விபரிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை பெற்றோலியம் ஸ்ரொரேஜ் டெர்மினல் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் சாரச்சந்திர, பிரதி பொது முகாமையாளர் விநியோகம் பண்டார, தீயணைப்பு பிரிவின் முகாமையாளர் டயஸ், பாதுகாப்பு உதவி முகாமையாளர் அமுனுகம, தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஏ.எச் சிறியால, மேஜர் நிஜாங்கொட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த செயலமர்வில் இலங்கை பெற்றோலிய தீயணைக்கும் பிரிவினர், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரிவினர், டெலிகொம் தீயணைக்கும் பிரிவினர், படையினரின் தீயணைக்கும் பிரிவினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.