கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பிரதான துப்பாக்கிதாரி ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான அஜித் ரோஹன என்பவரே தெஹிவளை கௌடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அத்துருகிரிய பிரதேசத்தில் இருந்து வீடொன்றை வாடகைக்கு எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பஸ்ஸில் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்ற நபரான 29 வயதுடைய தருகர வருண இந்திக்கட சில்வா என்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் கீழ் அதன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து டி-56 துப்பாக்கி, 120 தோட்டாக்கள் மற்றும் 9 மி.மீ பிஸ்டல் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.