டைம் ட்ராவல் தொடர்பான சில உண்மைகள் நம்மை அதிக அளவில் ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த வகையில், பூமியில் இருக்கும் நாம் அனைவரும் டைம் ட்ராவல் செய்துகொண்டிருக்கிறோம் என்று விஞ்ஞானிகள் கூறுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா!
ஒரு வாட்சை கட்டிக்கொண்டு அதில் காலத்தை செட் செய்தால், அந்த காலகட்டத்திற்கு கண்ணிமைக்கும் நேரத்திற்கு நாம் சென்று விடுவோம். இதுதான் டைம் ட்ராவல் பற்றி சினிமாக்கள் சொல்லிக்கொடுத்திருப்பவை. உண்மையில் இப்படியெல்லாம் டைம் ட்ராவல் செய்ய முடியாது. முதலில் காலம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
காலம்
இந்த பிரபஞ்சத்தில் காலமும், விண்வெளியும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. எளியதாக சொல்வதெனில் விண்வெளியில் நாம் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய காலம் மெதுவாக நகரும். அதாவது வயது மெதுவாக நகரும். வேகம் எனில் எல்லாவற்றிற்கும் ஓர் லிமிட் இருக்கிறது அல்லவா? விண்வெளியில் லைட்தான் நம்முடைய லிமிட்.
அதாவது, ஒளி ஒரு விநாடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். பூமியிலிருந்து ஒரு ராக்கெட்டை எடுத்துக்கொண்டு சுமார் 3 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த விண்வெளியில் பயணம் செய்து ஓராண்டு கழித்து பூமிக்கு திரும்பி வந்து பார்த்தால், உங்கள் வயது கொண்ட உங்களுடைய நண்பருக்கு உங்களை விட 5-10 வயது அதிகமாக ஆகியிருக்கும். நீங்கள் அதே வயதில்தான் இருப்பீர்கள். இதுதான் டைம் ட்ராவல்.
மனிதர்களால் இப்போதைக்கு இதைத்தான் செய்ய முடியும். மற்றபடி சினிமாக்களில் காட்டுவதை போல கடந்த காலத்திற்கு போக முடியாது. ஏனெனில் ஒளியை விட வேகமாக போனால்தான் நாம் கடந்த காலத்தை அடைய முடியும். அப்படியொரு ராக்கெட்டை மனிதர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. உண்மையை சொல்வதெனில் மனிதன் உருவாக்கியதில் மிகவும் வேகமான பொருள் வாயேஜர் -1 விண்கலம்தான். இது மணிக்கு சுமார் 37,895 கி.மீ வேகத்தில் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஒருவேளை ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ராக்கெட்டை இனி வரும் காலங்களில் மனிதர்கள் கண்டுபிடித்தால் நம்மால் கடந்த காலத்திற்கு போக முடியும். சரி விஷயத்திற்கு வருவோம்.
இந்த பிரபஞ்சத்தில் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கும் பொருட்கள் எல்லாம் டைம் ட்ராவல் செய்துக்கொண்டுதான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படி பார்த்தால் நமது பூமியும், பூமியில் உள்ள நாமும் கூட டைம் ட்ராவல்தான் செய்துக்கொண்டிருக்கிறோம். அதாவது சூரியனை சுற்றி பூமி மணிக்கு சுமார் 1,07,826 வேகத்தில் பயணிக்கிறது. ஆனால் ஒளி ஒரு மணி நேரத்தில் 108 கோடி கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. அப்படியெனில் இந்த பூமி ஒளியை விட 10 ஆயிரம் மடங்கு குறைவாக டைம் ட்ராவல் செய்கிறது.
பூமியின் மீதிருக்கும் நமக்கு, நாம் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பதை போலதான் தோன்றும். ஆனால் உண்மையில் இந்த பிரபஞ்சத்தை சூரியன் சுற்றி வருகிறது. சூரியனோடு சேர்ந்து பூமியும் வேகமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இதை கேட்கும்போது சந்தேகமாக இருக்கலாம். நம்முடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள வானத்தை உற்றுப்பார்த்து உறுதி செய்துக்கொள்ளலாம். ஏனெனில் தற்போது நமக்கு வட துருவ நட்சத்திரமாக இருப்பது பொலரீஸ் ஆகும். ஆனால் 26,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நட்சத்திரம் மாறும். சூரியனும் பூமியும் ஒரே இடத்தில் இருந்தால் இப்படி மாற்றங்கள் ஏற்படாது. எனவே சூரியன் இந்த பிரபஞ்சத்தை சுற்றி வருகிறது. சூரியனோடு பூமியும் இந்த பிரபஞ்சத்தை சுற்றி வருகிறது. வேகமாக செல்லும் பொருட்கள் அனைத்தும் டைம் ட்ராவல் செய்கிறது என்கிற விதிகளுக்கு ஏற்ப இந்த பூமியும் டைம் ட்ராவல் செய்கிறது என்பதை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் நாம்தான் இருப்பதை விட்டுவிட்டு இல்லாத டைம் ட்ராவலுக்கு ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.