Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

1 year ago
in உலக செய்திகள், சிறப்பு கட்டுரைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிகார வரம்பினை மீறி சர்வதேச வரிகளை விதித்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வரிகள் சாதாரண மக்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை அனைவரிடமும் இறக்குமதி செலவுகளை அதிகரிக்கச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இந்த தீர்ப்பை ஏகமனதாக வழங்கியது.

விடுதலை நாள் “லிபரேஷன் டே” என அழைக்கப்பட்ட வரிகள் மற்றும் சீனா, மெக்சிகோ, கனடாவுக்கெதிராக போதைப் பொருள்கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட வரிகளையும் இந்த தீர்ப்பு தடை செய்கிறது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், பெரும்பாலான வரிகள் 10 நாட்களுக்குள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும் இந்த தடைக்கு எதிராக டிரம்ப் அரசாங்கம் மேன்முறையீடுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • சீனாவிற்கு விதிக்கப்பட்ட 30% வரி
  • மெக்சிகோ மற்றும் கனடாவிற்கு விதிக்கப்பட்ட 25% வரி
  • பெரும்பாலான உள்நாட்டு வர்த்தக பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 10% பொதுவரி இதில் இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட 25% வரிகள் மட்டும் இந்த தீர்ப்பின் உட்பட்டதல்ல, ஏனெனில் அவை வேறொரு சட்டமான 232ம் பிரிவின் கீழ் அமுல்படுத்தப்பட்டவை.

இந்த வழக்கை லிபர்ட்டி ஜஸ்டிஸ் சென்டர் ‘Liberty Justice Center’ எனும் உரிமைகளை ஆதரிக்கும் அமைப்பும், VOS Selections என்ற வைன் விற்பனையாளரும், நான்கு சிறிய நிறுவனங்களும் தாக்கல் செய்தனர்.

இதனுடன் ஒன்பது மாநிலங்கள் கொண்ட ஜனநாயகக் கட்சி ஆட்சி மாநிலங்களும் வழக்கு தொடர்ந்திருந்தன.

“இந்த தீர்ப்பு மிக முக்கியமானது. வர்த்தகத் துறையிலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும்,” என Liberty Justice Center சட்டத்தரணி ஜெஃப்ரி ஸ்வாப் குிறப்பிட்டுள்ளார்.

நீதிமன்றின் இந்த தீர்ப்பிற்கு அரசாங்கத் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச அவசர பொருளாதார சட்டத்தின் கீழ் “IEEPA (International Emergency Economic Powers Act) ஜனாதிபதிக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை,” என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு டிரம்ப் நிர்வாகத்தின் ஆட்சி சக்தியை மையமாக கொண்டு நடைபெறும் முக்கிய வழக்காக மாறியுள்ளது.

முடிவில், இது சர்வதேச வர்த்தக சட்டம் மற்றும் ஜனநாயக ஆட்சியின் அதிகாரப் பிரிவுகள் குறித்த முக்கியமான முன்னுதாரணமாக இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்த வழக்குத் தீர்ப்பு சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்
உலக செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

September 2, 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!
உலக செய்திகள்

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

September 2, 2026
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

September 2, 2026
நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!
உலக செய்திகள்

நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

September 1, 2026
மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
உலக செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

August 31, 2026
பிரான்சில் பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்பு
உலக செய்திகள்

பிரான்சில் பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்பு

August 31, 2026
Next Post
யாழில் இருந்து கதிர்காமத்திற்கு மிக நீண்ட பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு மாமாங்கம் ஆலயத்தை வந்தடைந்தது

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு மிக நீண்ட பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு மாமாங்கம் ஆலயத்தை வந்தடைந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.